search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிஸ்பன் நகர கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
    X

    லிஸ்பன் நகர கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

    அரசுமுறை பயணத்தின் முதற்கட்டமாக போர்ச்சுகலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
    லிஸ்பன்:

    அரசுமுறை பயணமாக மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக போர்ச்சுகல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்த பின் லிஸ்பன் நகரில் உள்ள ராதாகிருஷ்ணா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    போர்ச்சுகலில் ஒருநாள் பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
    2016-17 காலகட்டத்தில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான அன்னிய நேரடி முதலீடு இருமடங்கு அதிகரித்துள்ளது. இதுதவிர சரக்கு, சேவைகள், நிதி மற்றும் மனித வளம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளுக்கிடையே வளர்ச்சியடைய முடியும்.

    போர்ச்சுகலின் வர்த்தக நிலை மீண்டும் எழும் நிலையும், இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சி இரு நாடுகளும் சமமாக வளர்ச்சியடைய பக்கபலமாக இருக்கும். தொழில்முயற்சிகளுக்கான துடிப்பான ஐரோப்பிய சுற்றுச்சூழலை போர்ச்சுகல் கொண்டுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதில் இந்தியா அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது.  

    போர்ச்சுகலுக்கு நன்றி, இந்த பயணத்தில் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான உறவு மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என பிரதமர் மோடியின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×