search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா எல்லையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
    X

    சிரியா எல்லையில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

    சிரியா எல்லையில் மிரட்டும் விதமாக பறந்த ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
    சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ப‌ஷல் அல்- ஆசாத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஐ.எஸ். தீவிரவாதிகளும் சிரியாவில் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதாக கூறி அமெரிக்கா ராணுவம் கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து சண்டையிட்டு வருகிறது. அதேவேளையில் தீவிரவாதிகளை ஒழிப்பதாக கூறி அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி அமெரிக்கா - ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று அமெரிக்க ராணுவம், சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. தங்களது ராணுவத்தை பாதுகாக்கவே சுட்டு வீழ்த்தினோம் என்று அமெரிக்கா விளக்கம் அளித்தது. இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்தது. மேலும், சிரியா எல்லைக்குள் அமெரிக்க விமானம் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா எச்சரித்தது.

    இந்நிலையில் சிரியாவின் வடகிழக்கில் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அட்-டனாஃப் காரிசன் பகுதியில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெத் 129 என்ற ஆளில்லா விமானம் பறந்து கொண்டிருந்தது. அதை அமெரிக்க கூட்டுப்படை எஃப்-15 ஸ்ட்ரைக் ஈகிள் ஜெட் மூலம் தாக்கி அழித்துள்ளது. இதை அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளன. எங்களை அச்சுறுத்தும் வகையில் ஆளில்லா விமானம் பறந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

    நேற்று சிரியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தியிருந்த நிலையில், இன்று ஆளில்லா விமானத்தை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×