search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் லிபியாவின் முக்கிய தீவிரவாத இயக்கம் கலைப்பு
    X

    ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் லிபியாவின் முக்கிய தீவிரவாத இயக்கம் கலைப்பு

    லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் அந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    திரிபோலி:

    லிபியாவின் முக்கிய நகரமான பென்காஸியில் செயல்பட்டு வந்த அன்சார்-அல்-ஷாரியா தீவிரவாத அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகளை கொன்றது உள்ளிட்ட பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால், அமெரிக்கா மற்றும் ஐ.நா இந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்தது.

    கடந்த 2014-ம் ஆண்டில் லிபியா அரசுப்படையினருக்கு எதிரான சண்டையின் போது இதன் தலைவராக இருந்த முகம்மது அஸஹாவி கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த இயக்கம் தடுமாற ஆரம்பித்தது. பின்னர், ஐ.எஸ் இயக்கம் தலையெடுத்த பின்னர், அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்திலிருந்த பலர் அங்கு மாறிச் சென்றனர்.

    இந்நிலையில், இந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
    Next Story
    ×