search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
    X

    வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகபட்சமாக 60 அடியை எட்டியது. அதனை அடுத்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. இதனால் முறைப்பாசனம் அமுல்படுத் தப்பட்டு குறிப்பிட்ட இடை வெளிவிட்டு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இருந்தபோதும் அதன் பிறகுகூட மழை பெய்ய வில்லை. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் கனிசமாக உயர்த்தப்பட்டது.

    கடந்த சில நாட்களாக மதுரை மாவட்ட விவசாயத் திற்காக 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 41 அடிக்கு கீழாக குறைந்ததால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.94 அடியாக உள்ளது. அணைக்கு 295 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1024 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.80 அடியாக உள்ளது வரத்து 98 கன அடி. திறப்பு 500 கன அடி. மஞ்களாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடி. நீர் திறப்பு 40 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.21 அடி. திறப்பு 6 கன அடி.
    Next Story
    ×