search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிளைத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 66 ஆயிரம் செல்போன் டவர்களை தனியார் மயமாக்ககூடாது. 3 வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 2 வது ஊதிய குழுவில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பணியை புறக்கணித்து தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 87 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட உதவி செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×