search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மிடாஸ்’ நிறுவனத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான கொள்முதல் நிறுத்தம்
    X

    ‘மிடாஸ்’ நிறுவனத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான கொள்முதல் நிறுத்தம்

    சசிகலாவுக்கு சொந்தமான ‘மிடாஸ்’ நிறுவனத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான வகைகள் 11 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன. மாதந்தோறும் 50 லட்சம் மதுபான பெட்டிகள் இந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக, சசிகலாவுக்கு சொந்தமான ‘மிடாஸ்’ நிறுவனத்திடம் இருந்து மட்டுமே 25 சதவீதம் அளவுக்கு மதுபான வகைகள் வாங்கப்பட்டு வந்தன.



    ஆனால், வருமான வரி சோதனை ‘மிடாஸ்’ நிறுவனத்திலும் நடைபெற்ற நிலையில், அந்நிறுவன கணக்குகள் தற்போது முடக்கிவைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, டாஸ்மாக் கடைகளுக்கு மது ஆலைகளில் இருந்து, மது வகைகள் வாங்கப்படும் போதே, அதற்கான ஆயத்தீர்வையை கட்டியாக வேண்டும். தற்போது, ‘மிடாஸ்’ நிறுவனத்தின் கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால், அவர்களால் ஆயத்தீர்வை கட்டி, மது விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, கடந்த 14 நாட்களாக ‘மிடாஸ்’ நிறுவனத்திடம் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான வகைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

    இதுவரை ‘மிடாஸ்’ நிறுவனத்திடம் இருந்து மாதம்தோறும் 9 லட்சம் முதல் 11 லட்சம் பெட்டிகள் வரை 23 வகையான மதுபான வகைகள் வாங்கப்பட்டு வந்தன. தற்போது, அது நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மற்ற மதுபான ஆலைகளில் இருந்து கூடுதலாக மது வகைகள் வாங்கப்படுகின்றன.

    இதன் மூலம், தடையில்லாமல் டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இனி ‘மிடாஸ்’ நிறுவனத்திடம் இருந்து மது வகைகள் வாங்குவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ளும் என்றே தெரிகிறது.

    Next Story
    ×