search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் 6-வது நாளாக விசாரணை
    X

    கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் 6-வது நாளாக விசாரணை

    கொடநாடு எஸ்டேட் மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 6-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோத்தகிரி:

    தமிழகம் முழுவதும் சகிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர்.

    பல்வேறு இடங்களில் சோதனை முடிந்து விட்டது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இதனை மேலாளர் நடராஜன் நிர்வகித்து வருகிறார்.

    இந்த எஸ்டேட்டுக்கு கடந்த 9-ந் தேதி வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்து கொண்டு அருகில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டுக்கு சென்றனர்.

    அங்கு சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்டேட் மேலாளரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) 6-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    கொடநாடு எஸ்டேட் சொத்து குவிப்பு வழக்கில் விசாரணையில் உள்ளதால் அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் கர்சன் எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 5 நாட்களில் 80 மணி நேரம் கொடநாடு எஸ்டேட்டை நிர்வகித்து வரும் நடராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் 4 புதிய அலுவலர்கள் அங்கு வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×