search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X

    ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போலீஸ்காரர் சஸ்பெண்டு

    ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு போலீஸ்காரர் ‘சஸ்பெண்டு’

    முசிறி, அக். 22-

    திருச்சி அருகே ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்கா ரர் சஸ்பெண்டு செய்யப் பட்டார்.

    திருச்சியில் இருந்து நாமக் கல் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படிக்கும் மாணவி பயணம் செய்தார்.

    அப்போது அந்த பஸ்சில் பய ணம் செய்த ஒரு போலீஸ் காரர், அந்த மாணவியின் அருகில் அமர்ந்து, மாணவியி டம் பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த அந்த மாணவி இருக்கையில் இருந்து எழுந்து செல்ல முயன்ற போது, அவரை தடுத்து போலீஸ்கா ரர் மிரட்டினார்.

    போலீஸ்காரரின் பாலி யல் தொந்தரவு காரணமாக பதற்றம் மற்றும் பயத்துடன் பயணித்த மாணவிக்கு தொட்டியம் அருகே சென்ற போது திடீர் என வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பயணிகள் உதவியு டன் அந்த மாணவியை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தொட்டியம் போலீசார் நடத்திய விசார ணையில், மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் நிலை யத்தை சேர்ந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனத்தில் டிரைவராக பணிபுரியும் ஜெயசீலன் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ்காரர் ஜெயசீலனிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவியி டம் அவர் பாலியல் தொந்த ரவு செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து துணை சூப்பிரண்டு பாலமுருகன் அளித்த அறிக்கையின் அடிப்படையில், போலீஸ்காரர் ஜெயசீலனை பணியிடை நீக் கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    Next Story
    ×