search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
    X

    திருவள்ளூரில் காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை: திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

    திருவள்ளூரில் காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் நகரை ஒட்டிய காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட பூங்கா நகர் பகுதியில் சுகாதார துறை மூலம் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமின்போது கலெக்டர் சுந்தரவல்லி நேரில் வந்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் வீட்டருகே காலியாக உள்ள மனைகளில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து குப்பைத் தொட்டிகள் இல்லாத இடத்தில் குப்பைத் தொட்டிகளை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் சுற்றி உள்ள பூங்கா நகர் பகுதியில் வீடுகளில் குப்பைத் தொட்டிகளை வைத்து பராமரிக்காததாலும், ஏற்கனவே நோட்டிஸ் கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறினார்.

    மேலும் வீட்டில் ஆய்வு செய்யும் போது உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் உடனடியாக முகாமில் உள்ள மருத்துவர்களை அழைத்து பரிசோதனையையும் செய்து நிலவேம்பு கசாயத்தை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி நிருபர்களிடம் கூறுகையில், “வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருக்காமல் வீட்டை சுற்றிலும் காலியாக உள்ள மனைகளில் தேவையில்லாத பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கொட்டி னால் சுற்றுப் புறத்தில் உள்ள வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.
    Next Story
    ×