search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நடராஜனை சசிகலா இன்று மீண்டும் பார்த்தார்
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நடராஜனை சசிகலா இன்று மீண்டும் பார்த்தார்

    பெங்களூரில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் நடராஜனை இன்று மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சென்னை:

    சசிகலா கணவர் நடராஜனுக்கு சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

    அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா 5 நாள் பரோலில் சென்னை வந்துள்ளார். தி.நகரில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று காலை காரில் குளோபல் ஆஸ்பத்திரிக்கு சென்று கணவர் நடராஜனை பார்த்தார்.

    பின்னர் தி.நகர் வீட்டில் தங்கினார். இன்று 2-வது நாளாக சசிகலா ஆஸ்பத்திரிக்கு சென்று நடராஜனை பார்த்தார். இதற்காக காலை 10.40 மணிக்கு தி.நகர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் உறவினர் விஜய் ஆனந்தும் சென்றார்.

    வீட்டின் முன்பு தொண்டர்கள் சிலர் இருந்தனர். அவர்களை விட தமிழக-கர்நாடக போலீசார் சாதாரண உடையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    சசிகலா சென்றபோது டைடல்பார்க் அருகில் சிலர் வரவேற்றனர். பின்னர் குளோபல் ஆஸ்பத்திரியிலும் ஆதரவாளர்கள் வரவேற்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்றை விட இன்று ஆதரவாளர்கள் அதிகம் இல்லை.

    சசிகலா நேராக ஆஸ்பத்திரி முதல் மாடிக்கு சென்று கணவர் நடராஜனை பார்த்தார். அங்கு சிறிது நேரம் இருந்த பின்பு மீண்டும் தி.நகர் வீட்டுக்கு திரும்பினார்.

    நடராஜனுக்கு கடந்த 4-ந்தேதி விபத்தில் மூளைச் சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் கார்த்திக்கின் சிறுநீரகம், கல்லீரலை தானமாக பெற்று பொருத்தினார்கள்.

    இதில் சிறுநீரகத்தை பொருத்தும் ஆபரே‌ஷன் எளிதில் முடிந்து விடும். பயப்படும் அளவுக்கு இருக்காது. அதன் செயல்பாடு உடனே தெரிந்து விடும். ஆனால் கல்லீரல் மாற்று ஆபரே‌ஷன் சிறிது கஷ்டமானது. இந்த ஆபரே‌ஷன் செய்த பிறகு அதன் செயல்பாடு ரத்த நாளங்களுடன் சரிவர இயங்குகிறதா? என்பதை பொறுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும்.

    இதற்கு ஒரு வாரம் காலக்கெடு உண்டு. அதுவரை அவர் அபாய கட்டத்தில் தான் இருப்பார்.

    இதனால்தான் மிக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நடராஜனின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ‘வெண்டிலேட்டர்’ எனப்படும் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நடராஜனுக்கு ஆபரே‌ஷன் நடந்து 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவரது உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

    கல்லீரல் மற்றும் சிறு நீரகம் மாற்று அறுவை சிகிச்சை சேர்த்து செய்யப்பட்டுள்ளதால் சில நாட்களுக்கு சிக்கலாகத்தான் இருக்கும். ஆனாலும் தற்போது நடராஜன் சுய நினைவுடன் உள்ளார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில்தான் அவர் உள்ளார். இதனால் யாரையும் இந்த வார்டுக்குள் டாக்டர்கள் அனுமதிப்பதில்லை.

    Next Story
    ×