search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியை கலைத்துவிடலாம் என்பவர்களின் கனவு நிறைவேறாது: ராமராஜன் பேச்சு
    X

    ஆட்சியை கலைத்துவிடலாம் என்பவர்களின் கனவு நிறைவேறாது: ராமராஜன் பேச்சு

    இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என்பவர்களின் கனவு நிறைவேறாது என்று அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் வாலாஜாவில் நடந்தது. வாலாஜா நகர செயலாளர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். விழாவில் ஒன்றிய செயலாளர் பூங்காவனம் நகர செயலாளர்கள் மணி, இப்ராஹிம்கலிவுல்லா, சண்முகம், முன்னாள் தொகுதி செயலாளர் முனிசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் பூண்டி பிரகாஷ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர அவைதலைவர் எஸ்.மணி அனைவரையும் வரவேற்றார். பொதுகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் ராமராஜன், கேரளா சுப்பையா பாண்டியன், அப்துல் அமீத், கோ.அரி எம்.பி., சு.ரவி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசியதாவது:-

    மதுரைக்கு மீனாட்சி காஞ்சிக்கு காமாட்சி அதேபோல் தமிழகத்துக்கு புரட்சிதலைவி ஜெயலலிதா இதையாராலும் மாற்றமுடியாது.

    ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மாபியா கும்பல் தற்போது ஆட்சியை கட்சியை கலைத்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். காட்டில் வேடன் வேட்டையாட சென்றான் அப்போது அவன் கண்ணில் ஒரு ஆடு தென்பட்டது ஆடும் வேடனை பார்த்ததும் ஓட தொடங்கியது வேடனும் பின் தொடர்ந்தான். அப்போது ஆடு ஒரு அடர்ந்த புதரில் இலைகளுக்கு பின் மறைந்துகொண்டது. வேடனும் ஆடு தப்பித்துவிட்டதே என்று திரும்ப சென்றான் அப்போது அந்த ஆடு இலைகளை பறித்து சாப்பிட ஆரம்பித்தது ஆடு இலையை அசைப்போடும் சத்தம் கேட்டு வேடன் திரும்பினான். ஆடுவை பார்த்ததும் அம்பை விட்டான் ஆடு மறிந்தது. இதுபோல் யார் இரட்டை இலையை பறித்துவிடலாம் என்று நினைக்கிறார்களோ கட்சியை பிளவுபடுத்தலாம் என நினைக்கிறார்களோ அந்த ஆடு போல் இவர்களும் மறிந்துதான் போவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×