search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே சமையல் செய்த மக்கள்.
    X
    டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கேயே சமையல் செய்த மக்கள்.

    டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி சமையல் செய்து மக்கள் போராட்டம் - கலெக்டர் அலுவலகமும் முற்றுகை

    டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் பல்வேறு பகுதிகளிலும் நீடித்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் கடை முன்பு சமையல் செய்து மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் சில இடங்களில் எல்லை மீறி கடைகள் மீது கற்கள் வீச்சு, முட்களை வெட்டிப்போட்டு பாதையை அடைத்தல் என்பது வரை செல்கிறது.

    குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்துவருவதால் பல்வேறு பகுதிகளிலும் திறக்கப்பட்ட கடை கள் உடனுக்குடன் மூடப்படுகின்றன.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் வெங்கடேஷ்வரபுரம் பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைக்கப்பட்டது.

    இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மதுபான கடை முன் போராட்டம் நடத்தினர். அதனை அடுத்து கடை மூடப்பட்டு திறக்கப்படாமல் இருந்துவந்த நிலையில் நேற்று திடீரென கடை திறக்கப்பட்டது.

    இதையடுத்து தகவல் அறிந்து அங்குவந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் போலீசாரும், அதிகாரிகளும் அங்கு வரவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங் கேயே சமையல் செய்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

    சம்பவ இடத்திருக்கு வந்த காவல்துறையினர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தி அளித்தனர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரையிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் நீடித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நொண்டிக்கோவில்பட்டி மற்றும் மதுரை ராஜாமில் பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடவலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட் டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் நொண்டிக் கோவில்பட்டி பகுதியில் குடியிருப்பு மற்றும் பள்ளிகளுக்கு இடையே டாஸ்மாக் கடை திறக்க இருப்பதை கண்டித்து அந்த பகுதியில் முட்களை வெட்டிப்போட்டு பள்ளி மாணவர்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர்.
    Next Story
    ×