search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோமாக்ஸ் விளக்கில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றி ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி - கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் கைது
    X

    பெட்ரோமாக்ஸ் விளக்கில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றி ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி - கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் கைது

    வேப்பூர் அருகே பெட்ரோமாக்ஸ் விளக்கில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றி ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற கட்டிட தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள கழுதூரை சேர்ந்தவர் சிவா (வயது 38). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (62). கட்டிட தொழிலாளிகளான 2 பேரும் அதே கிராமத்தில் உள்ள பழைய பொருட்களை விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

    அப்போது பழமையான ‘பெட்ரோமாஸ்’ விளக்கு ஒன்று இவர்களுக்கு கிடைத்தது. இந்த விளக்கில் அதிக விலை மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக ஏமாற்றி விருத்தாசலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் வேல்முருகன் (45) என்பவரிடம் ரூ.5 கோடிக்கு விற்க ஏற்பாடு செய்தனர்.

    இது பற்றி குற்ற தடுப்பு நுண்ணறிவு போலீசுக்கு தகவல் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெரால்டு, சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சி மற்றும் போலீசார் மாறு வேடத்தில் கழுதூருதுக்கு வந்து சிவா, வேலாயுதத்தை சந்தித்தனர்.

    அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கை விலைக்கு வாங்குவது போல் பேசினர். அப்போது சிவாவும், வேலாயுதமும் ரூ.5 கோடி கொடுத்தால் விளக்கை தருவோம் என்று கூறினர்.

    இதையடுத்து சிவா, வேலாயுதம் ஆகியோரை நுண்ணறிவு பிரிவு போலீசார் கையும்-களவுமாக பிடித்து வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த பழமையான ‘பெட்ரோமாஸ்’ விளக்கை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வேறு யாரிடமும் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 2 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×