search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரங்கிமலை தண்டுமாநகரில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு
    X

    பரங்கிமலை தண்டுமாநகரில் 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு

    பரங்கிமலை தண்டுமாநகரில் 3 நாட்களாக மின்தடை நீடிப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் உள்ளது தண்டுமாநகர். பரங்கிமலை கண்டோன்மெண்ட் 4-வது வார்டுக்கு உள்பட்ட இங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.

    தண்டுமாநகரில் உள்ள 10 வீடுகளுக்கு மட்டும் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட கேபிள் மூலமாக மின்சப்ளை செய்யப்படுகிறது. இதனால் அடிக்கடி அங்கு மின்தடை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அங்கு வசித்து வருபவர்களின் வீடுகளில் கடந்த 19-ந்தேதியில் இருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களாக மின்தடை நீடிப்பதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வீடுகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர், மின்தடையால் தவிப்புக் குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து விழித்திருக்கிறார்கள்.

    பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் சிலர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்ற குழந்தைகளை தூங்க வைக்க முடியாமல் பெற்றோர்களும் தவிக்கிறார்கள்.

    இதுபற்றி பரங்கிமலை மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரும் இதுபோன்று மின்தடை ஏற்பட்டதாக கூறும் அப்பகுதி மக்கள் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×