search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி ஜூன் 1-ல் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி
    X

    ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி ஜூன் 1-ல் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி ஜூன் 1-ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம், பங்கீட்டு ஒழுங்காற்று குழு உடனே அமைத்து தமிழக விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தேசிய அளவிலான நதி நீர் ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு 4½ ஆண்டுகளுக்குள் காவிரி வழக்கை புதிதாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்ற அடிப்படையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் புதிய காவிரி கண்காணிப்பு குழு அமைக்க போகிறோம் என அதற்கு கருத்து கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதுகிறது. இதில் தமிழக அரசின் நிலை என்ன என்பது இதுவரை தெளிவுப்படுத்தவில்லை.

    நடப்பாண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் கொண்ட மத்திய அரசுதான் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது.

    எனவே வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி தஞ்சையில் வருகிற (ஜூன்) 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தொடர்ந்து காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

    Next Story
    ×