search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு கிடக்கும் காட்சி
    X
    ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு கிடக்கும் காட்சி

    காவிரி ஆறு வறண்டது: சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல் நீக்கம்

    இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் காவிரி ஆறு வறண்டு உள்ளது. இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது.
    ஒகேனக்கல்:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அந்த நிறுவனம் ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்காடு மற்றும் ஒகேனக்கல்லுக்கு அழைத்து வருவார்கள்.

    இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து குறைந்தது. தற்போது காவிரி ஆறு வறண்டு உள்ளது. ஒகேனக்கல் அருவி பகுதியில் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று போனதால் பாறைகள் மட்டுமே காட்சி அளிக்கிறது.

    இதனால் இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது. இதனால் சென்னையில் இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் அழைத்து வரப்படமாட்டார்கள்.

    வழக்கமாக கோடை காலத்தில் கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து செல்வார்கள்.



    தற்போது அவர்களும் ஒகேனக்கல்லுக்கு வருவதில்லை. இதனால் ஒகேனக்கல்லில் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். சமையல் கலைஞர்கள், மீன் வறுவல் வியாபாரம் செய்பவர்கள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.



    Next Story
    ×