search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிவர்பூல் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்வான்சீ
    X

    லிவர்பூல் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்வான்சீ

    பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணியின் தொடர் வெற்றிக்கு ஸ்வான்சீ முற்றுப் புள்ளி வைத்தது. #PremierLeague #LiverPool #Swansea
    பிரிமீயர் லீக் கால்பந்து லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முன்னணி அணியான லிவர்பூல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஸ்வான்சீ அணியை எதிர்கொண்டது.

    இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்வான்சீ அணி 1-0 என வெற்றி பெற்று லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.



    இந்த வெற்றியின் மூலம் 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வந்த லிவர்பூல் அணியின் சாதனைக்கு ஸ்வான்சீ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    மேலும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த தோல்வியில் சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பு மேலும் மங்கியுள்ளது.



    மான்செஸ்டர் சிட்டி 65 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் 53 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செல்சியா 50 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், லிவர்பூல் 47 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளது. #PremierLeague #LiverPool #Swansea
    Next Story
    ×