search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதியில் நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட்
    X

    ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதியில் நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு நடால், டிமிட்ரோவ், சிலிக், எட்மண்ட் முன்னேறியுள்ளனர். #AUSOpen #Nadal #Dimitrov
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளின் 8 ஆட்டங்களில் நான்கு இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரராக ரபெல் நடால் அர்ஜென்டினாவின் டியேகோ ஸ்வார்ட்ஸ்மேன்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டியேகோ ஸ்வார்ட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நடால் சற்று திணறினார். இதனால் 2-வது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் நடால் 6(4) - 7(7) என இழந்தார். அதன்பின் 3-வது செட்டை 6-3 எனவும், 4-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 17-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ்-ஐ எதிர்கொண்ட. இதில் 3-ம் நிலை வீரரான டிமிட்ரோவிற்கு சொந்த ஊரில் விளையாடிய 17-ம் நிலை வீரரான கிர்ஜியோஸ் கடும் சவாலாக திகழந்தார். இதனால் நான்கில் மூன்று செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் டிமிட்ரோப் 7(7) - 6(3), 7(7) - 6(4), 4 - 6, 7(7) - 6(4) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


    கிரிகோர் டிமிட்ரோவ்

    மற்றொரு ஆட்டத்தில் தரநிலை பெறாத வீரர்களான தென்ஆப்பிரிக்காவின் கைல் எட்மண்ட் இத்தாலியின் அன்டிரியாஸ் செபி-ஐ எதிர்கொண்டார். இதில் எட்மண்ட் 6(4) - 7(7), 7-5, 6-2, 6-3 என வெற்றி பெற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.


    கைல் எட்மண்ட்

    4-வது ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான போஸ்னியாவின் மரின் சிலிக் 10-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் பப்லோ கரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் மரின் சிலிக் 6(2) - 7(7), 6-3, 7(7) - 6(0), 7(7) - 6(3) என வெற்றி பெற்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


    மரின் சிலிக்

    நாளை நடக்கும் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ரோஜர் பெடரர், பெர்டிச், தியம், ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.

    காலிறுதியில் ரபெல் நடால் 6-ம் நிலை வீரரான மரின் சிலிக்கையும், டிமிட்ரோவ் எட்மண்டையும் எதிர்கொள்கிறார்கள். #AUSOpen #Nadal #Dimitrov #Edmund #cilic
    Next Story
    ×