search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் படுதோல்வியால் அணியில் பெரிய மாற்றம் தேவையில்லை: ஆண்டர்சன்
    X

    ஆஷஸ் படுதோல்வியால் அணியில் பெரிய மாற்றம் தேவையில்லை: ஆண்டர்சன்

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அஷஸ் படுதோல்வியால் இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் செய்ய வேண்டியதில்லை என ஆண்டர்சன் கூறியுள்ளார். #ashes #ausveng
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 4-0 எனத் தொடரை கைப்பற்றியது.

    இந்த தொடரில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாமல் திணறினார்கள். அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி ஆகியோர் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

    மோசமான தோல்வியால் இங்கிலாந்து பந்து வீச்சு யுனிட் மீது விமர்சனம் எழும்பி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.



    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த 18 மாதங்களாக முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் சரியான திசையில் முன்னேறியுள்ளோம். ஒரு தொடரில் இதுபோன்ற மோசமான செயல்பாட்டால் குறை சொல்வதை விரும்பவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஐந்து போட்டிகளிலும் நாங்கள் மோசமான தோல்வியை சந்திக்கவில்லை.

    ஒவ்வொரு போட்டியும் ஐந்து நாட்கள் சென்றன. இது முற்றிலும் மோசமான தொடர் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான இடங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    Next Story
    ×