search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
    X

    பிக் பாஷ் கிரிக்கெட்: சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிட்னி அணி வீரர்கள் எதிரணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். சிட்னி சிக்ஸர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜொகன் போத்தா அதிகபட்சமாக 32 ரன்கள் (23 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தார். இதுதவிர நிக் மேடின்சன் 24 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மெல்போர்ன் அணி தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்களும், ஜாக் வில்டர்மத், பிராட் ஹாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
     

    பின்னர் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். மார்கஸ் ஹாரிஸ் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேமரான் ஒயிட், பிஞ்ச்சுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக விளையாடிய பிஞ்ச் 51 ரன்கள் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் வெய்ன் பிராவோ களமிறங்கினார். மெல்போர்ன் அணி 15.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. கெமரான் ஒயிட் 49 ரன்களுடனும், வெய்ன் பிராவோ 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.


    சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த மெல்போர்ன் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #MelbourneRenegades #SydneySixers
    Next Story
    ×