என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேதர் ஜாதவ், சர்துல் தாகூருக்கு இடம்; அஸ்வின், ஜடேஜா மீண்டும் அவுட்
    X

    தென்ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்: கேதர் ஜாதவ், சர்துல் தாகூருக்கு இடம்; அஸ்வின், ஜடேஜா மீண்டும் அவுட்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், சர்துல் தாகூர் இடம்பிடித்துள்ளனர்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென்ஆப்பிரிக்காவில் மூன்று வகை தொடர் நடைபெறுகிறது.

    இதற்காக இந்திய அணி வரும் 27-ந்தேதி தென்ஆப்பிரிக்காவிற்கு புறப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


    வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர்

    வழக்கம்போல் அஸ்வின், ஜடேஜாவிற்கு இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். உமேஷ் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து விச்சில் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல் இடம்பிடித்துள்ளனர். அஸ்வின், ஜடேஜாவிற்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை.



    நியூசிலாந்து, இலங்கை தொடரில் இடம்பிடிக்காத கேதர் ஜாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கை தொடரில் ஓய்வு காரணமாக விளையாடாத விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. ரகானே, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. கேதர் ஜாதவ், 8. டோனி, 9. ஹர்திக் பாண்டியா, 10. அக்சார் பட்டேல், 11. குல்தீப் யாதவ், 12. சாஹல், 13. புவனேஸ்வர் குமார், 14. பும்ரா, 15. மொகமது ஷமி, 16. சர்துல் தாகூர், 17. தினேஷ் கார்த்திக்.
    Next Story
    ×