search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கதேச பிரீமியர் லீக்: 18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கெயிலுக்கு குவியும் பாராட்டு
    X

    வங்கதேச பிரீமியர் லீக்: 18 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த கெயிலுக்கு குவியும் பாராட்டு

    வங்கதேசத்தில் நடைபெற்ற பி.பி.எல். இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சிக்சர்களால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    வங்கதேசத்தில் நடைபெற்ற பி.பி.எல். இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சிக்சர்களால் ரங்க்பூர் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    வங்கதேச பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக சார்லசும், க்ரிஸ் கெயிலும் களமிறங்கினர். ஆனால், இரண்டாவது ஓவரில் ஜான்சன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் கெயிலுடன் மெக்கல்லம் களமிறங்கினார்.



    இதையடுத்த் கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். அவரது அதிரடிக்கு மெக்கல்லம் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த மெக்கல்லம் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.



    இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெயிலின் சாதனை துளிகள்:

    *   18 சிக்சர்கள் அடித்துள்ளார்
    *   டி-20 கிரிக்கெட்டில் 11,000 என்ற மைல் கல்லை தொட்ட முதல் பேட்ஸ்மேன்.
    *   டி-20 கிரிக்கெட்டில் 20 சதங்கள் அடித்து அசத்தியவர்
    *   மொத்தம் 819 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்
    *   பிபி எல்லில் 100 சிக்சர்கள் அடித்தவர்
    *   டி-20 இறுதி போட்டியில், மெக்கலமுடன் சேர்ந்து கெயில் 201 ரன்கள்  எடுத்து சாதனை படைத்துள்ளார்.

    இதையடுத்து, டாக்கா டைனமைட்ஸ் அணி 202 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜஹ்ருல் இஸ்லாம் 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டர்ரி அடித்து 50 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் தாக்குப் பிடிக்கவில்லை.
    இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதனால் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    சாதனைகள் படைத்து வரும் கிறிஸ் கெயிலுக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×