search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஆஸ்திரேலியா
    X

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது ஆஸ்திரேலியா

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
    புவனேஸ்வர்:

    ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடைபெற்று வந்தது. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் ஆஸ்திரேலியா - அர்ஜெண்டினா அணிகள் மோதின.



    இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும் முனைப்புடன் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவும் விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மி ஹைவார்ட் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் புகல்லோ கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமனானது.

    தொடர்ந்து இரு அணியினரும் கொல் அடித்து முன்னிலை பெற முயற்சித்தனர். இருப்பினும் கோல் அடிக்கும் அனைத்து முயற்சிகளும் வீணானது. அதன்பின் கடைசியில் 58-வது நிமிட ஆட்டத்தில் பிளேக் கோவர்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.



    அதைத்தொடர்ந்து மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

    முன்னதாக மாலை 5:15 மணிக்கு நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தியது.
    Next Story
    ×