search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முடியாத கவலை நீங்கியது: உலக போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் பேட்டி
    X

    ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முடியாத கவலை நீங்கியது: உலக போட்டியில் தங்கம் வென்ற மீராபாய் பேட்டி

    உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முடியாத ஏமாற்றம் மற்றும் கவலை நீங்கிவிட்டதாக இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    மீராபாய் மற்றும் அவரது பயிற்சியாளருக்கு இந்திய பளுதூக்குதல் பெடரேசன் பொதுச்செயலாள் ஷாதேவ் யாதவ் பாராட்டினார். ஒலிம்பிக்கை விட பெரிய பதக்கம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வெற்றி குறித்து மீராபாய் சானு கூறுகையில், ‘எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த வெற்றியானது சாத்தியமில்லை. வெற்றியின் உச்சத்தை தொடுவதற்காக நானும் என் பயிற்சியாளரும் அனைத்து வகையிலும் முயற்சி செய்தோம்.



    அதேசமயம், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. அந்த போட்டியின்போது சில தவறுகள் செய்தேன். அது இன்னும் வருத்தமாக உள்ளது. இந்த பதக்கம் அந்த கவலையை போக்கிவிட்டது. எனது பலவீனங்களை சரி செய்து, அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்வேன்’ என்றார்.
    Next Story
    ×