search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டியில் கோவா அணியை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: லீக் போட்டியில் கோவா அணியை 2-1 என வீழ்த்தியது மும்பை அணி

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி. கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி. அணி வீழ்த்தியது.

    கொச்சி:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். கோவா அணி முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தியது. மும்பை அணி முதல் போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது. 

    போட்டி தொடங்கியது முதல் இரு அணியினரும் மாறி மாறி கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் மும்பை அணியின் எவர்டன் சாண்டோஸ் முதல் கோல் அடித்தார். அதன்பின் 83-வது நிமிடத்தில் கோவாவின் மனுவல் அரனா ரொட்ரிகஸ் கொல் அடித்தார். அதனால் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனானது. எனவே இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடித்து வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டினர். இருப்பினும் 88-வது நிமிடத்தில் மும்பை அணியின் தியாகோ நஸ்சிமெண்டோ டாஸ் சாண்டோஸ் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் மும்பை அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியின் எவர்டன் சாண்டோஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    இதில் வெற்றி பெற்ற மும்பை அணி 3 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு முன்னேறியது. கோவா அணியும் 3 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    நாளை கொல்கத்தாவில் நடைபெறும் லீக் போட்டியில் அதெலிடிகோ டி கொல்கத்தா எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோத உள்ளன.
    Next Story
    ×