search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
    X

    தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்

    தேசிய ஜூனியர் தடகளம் போட்டியில் நேற்று நடந்த 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கப்பதக்கம் வென்றார்.
    விஜயவாடா:

    33-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா 14.56 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

    தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளரும், சுங்க இலாகா சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.
    Next Story
    ×