search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிலிப் கவுட்டினோவிற்குப் பதிலாக மெசுட் ஒசில்-ஐ குறிவைக்கும் பார்சிலோனா
    X

    பிலிப் கவுட்டினோவிற்குப் பதிலாக மெசுட் ஒசில்-ஐ குறிவைக்கும் பார்சிலோனா

    லிவர்பூல் அணியின் பிலிப்பே கவுட்டினோவிற்குப் பதிலாக அர்செனல் வீரர் மெசுட் ஒசில்-ஐ குறி வைக்கிறது பா்ரசிலோனா.
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து அணியாக திகழ்ந்து வருவது பார்சிலோனா. இந்த அணியில் விளையாடிய பிரேசில் அணியின் நெய்மர் பிரான்ஸில் உள்ள பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு டிரான்ஸ்பர் ஆனார்.

    நெய்மருக்குப் பதிலாக லிவர்பூல் அணியில் விளையாடும் பிலிப் கவுட்டினோவை வாங்க பார்சிலோனா விரும்பியது. ஆனால் லிவர்பூல் அவரை விடுவிக்க மறுத்தது. இந்நிலையில் அர்செனல் அணியில் விளையாடும் மெசுட் ஒசில்-ஐ வாங்க பார்சிலோனா திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதம் நடக்கும் டிரான்ஸ்பரின்போது இதற்கான முயற்சியை பார்சிலோனா எடுக்க இருக்கிறது.



    ஒசிலின் ஒப்பந்தம் இந்த சீசனோடு முடிவடைகிறது. இதனால் ஜனவரி மாதம் டிரான்ஸ்பருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அலெக்சிஸ் சான்செஸ் ஒப்பந்தமும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே ஜனவரியில் ஆர்டா துரான், அலெக்ஸ் விடால் அல்லது டெனிஸ் சுவாரஸ் ஆகியோரில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறது.
    Next Story
    ×