search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா ஓபன் பேட்மிண்டன்: முதன்மை சுற்றுக்கு பொண்ணப்பா - ரங்கிரெட்டி ஜோடி முன்னேற்றம்
    X

    சீனா ஓபன் பேட்மிண்டன்: முதன்மை சுற்றுக்கு பொண்ணப்பா - ரங்கிரெட்டி ஜோடி முன்னேற்றம்

    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் கலப்பு இரட்டையர் பிரிவின் முதன்மை சுற்றுக்கு இந்திய ஜோடி தகுதிப் பெற்றுள்ளது.
    சீன ஓபன் சூப்பர்சீரிஸ் பிரிமீயர் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஃபுஸோயு-வில் நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால், பிவி சிந்து கலந்து கொள்கிறார்கள்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி - அஸ்வினி பொண்ணப்பா ஜோடி முதன்மை சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால் தகுதிச்சுற்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.



    சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி - அஸ்வினி பொண்ணப்பா ஜோடி முதல் சுற்றில் டென்மார்க் ஜோடியை 21-16, 19-21, 22-20 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    2-வது சுற்றில் சீன தைபே ஜோடியை 24-22, 21-7 என வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    Next Story
    ×