search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பார்முலா 1’ கார் பந்தயம்: 4-வது முறையாக இங்கிலாந்து வீரர் ஹேமில்டன் சாம்பியன்
    X

    ‘பார்முலா 1’ கார் பந்தயம்: 4-வது முறையாக இங்கிலாந்து வீரர் ஹேமில்டன் சாம்பியன்

    இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன், ‘பார்முலா 1’ கார் பந்தயத்தில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
    மெக்சிகோ:

    கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார் பந்தயம். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம். 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது போட்டியான மெக்சிகன் கிராண்ட் பிரீ பந்தயம் நேற்று நடந்தது.

    இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர் வெர்ஸ் டேபன் வெற்றி பெற்றார். போட்ஸ்வால் டெரி போடஸ் 2-வது இடத்தையும், கிமிரெய்க்கோன் (பின்லாந்து) 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    இந்தப் போட்டியில் 9-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் சாம்பியன் பட்டம் பெற்றார். செபாஸ்டியன் மெட்டல் 4-வது இடத்துக்கு சென்றதால் அவரது ‘பார்முலா 1’ சாம்பியன் பட்டம் உறுதி செய்யப்பட்டது.

    ஹேமில்டன் 333 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார். வெட்டல் 277 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெரி போடஸ் 262 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இதில் யார் வெற்றி பெற்றாலும் ஹேமில்டனுக்கு பிரச்சினை இல்லை. இதனால் அவர் ‘பார்முலா1’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    32 வயதான ஹேமில்டன் ‘பார்முலா1’ கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2014, 2015 ஆண்டுகளில் பட்டம் பெற்று இருந்தார். இந்த சீசனில் (2007) ஹேமில்டன் 9 பந்தயங்களில் வெற்றி பெற்று இருந்தார்.

    மைக்கேல் சுமேக்கர் (ஜெர்மனி), 7 முறை ‘பார் முலா1’ பட்டத்தை வென்று முதல் இடத்தில் உள்ளார். பான்ஜியோ (அர்ஜென்டினா) 5 பட்டம் வென்றுள்ளார். புரோஸ்ட் (பிரான்ஸ்), செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) ஆகியோருடன் இணைந்து 4 பட்டம் வென்று ஹேமில்டன் 3-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×