search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி பயிற்சியின் போது பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்
    X

    இந்திய அணி பயிற்சியின் போது பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்

    நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசினார்.
    புதுடெல்லி:

    நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மும்பையில் உள்ள வான்கேட் மைதானத்தில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், இந்திய வீரர்கள் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசினார். 18 வயதான அர்ஜூன், அணி பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மேற்பார்வையில் பந்து வீசினார்.



    முதலில் அவர் இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவானிற்கு, அதற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனைத்து வீரர்களுக்கும் பந்து வீசினார். அர்ஜூன் தேசிய அணிக்கு பந்து வீசுவது இது முதல் முறையன்று. இதற்கு முன் இந்திய பெண்கள் அணிக்கு, ஐசிசி உலக கோப்பை போட்டி பயிற்சியின் போது பந்து வீசினார்.



    நம்பர் 1 பேட்ஸ்மேனாக வலம் வந்த சச்சினை போல் இல்லாமல் அவர் மகன் பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார். அர்ஜூன் U-19 மும்பை அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அர்ஜுன் பந்து வீசுவது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன.
    Next Story
    ×