search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ தர வேண்டிய 3 கோடி ரூபாய்க்காக காத்திருக்கும் யவுராஜ் சிங்
    X

    பிசிசிஐ தர வேண்டிய 3 கோடி ரூபாய்க்காக காத்திருக்கும் யவுராஜ் சிங்

    ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாமல் போனதற்கான இழப்பீடாக பிசிசிஐ தர வேண்டிய 3 கோடி ரூபாய்க்காக யுவுராஜ் சிங் காத்துக் கொண்டிருக்கிறார்.
    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டியின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் பங்கேற்கவில்லை.

    டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் ஐ.பி.எல். தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கத்தில் யுவராஜ் சிங் பங்கேற்க முடியவில்லை.

    பிசிசிஐ-யின் விதிமுறைப்படி ஐ.பி.எல். தொடரில் விளையாடும் இந்திய வீரர், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட்டு, ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாமல் போனால், பிசிசிஐ இழப்பீடு வழங்க வேண்டும்.



    அந்த வகையில் பிசிசிஐ யுவராஜ் சிங்கிற்கு சுமார் 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது அம்மாவும் பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து கேட்டுள்ளார்.

    இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு பிசிசிஐ-யின் பெரும்பாலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் யுவுராஜ் சிங் இந்த பிரச்சினையை நிர்வாகக் குழுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    இதனால் நிலுவைத் தொகை கிடைக்கும் என யுவராஜ் சிங் நம்பிக்கையில் உள்ளார்.
    Next Story
    ×