search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஸ்காலர்ஷிப்: கேலோ இந்தியா திட்டத்தில் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்
    X

    தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஸ்காலர்ஷிப்: கேலோ இந்தியா திட்டத்தில் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

    கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் தடகள வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் இளம் தடகள வீரர்களை உருவாக்கி விளையாட்டை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு ‘கேலோ இந்தியா‘ தேசிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய விளையாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


    இந்த சீரமைப்பு குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரத்தோர் கூறுகையில், “கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் பள்ளிகளில் திறமையான இளம் தடகள வீரர்களை கண்டறிந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு தடகள வீரருக்கும் 8 ஆண்டுகளுக்கு 5 லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். மேலும், பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்” என்றார்.
    Next Story
    ×