search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார். இந்த போட்டி 11-ந் தேதி அதிகாலை நடக்கிறது.
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.

    ஒரு அரை இறுதியில் 2 முறை சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) - இருபத்து நான்காவது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) மோதினார்கள்.

    இதன் முதல் செட்டை நடால் 4-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால் அதற்கு அடுத்த செட்களில் அவரது ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் டெல்போட்ரோ திணறினார். அடுத்த 3 செட்களையும் எளிதில் வென்று நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 4-6, 6-0, 6-3, 6-4

    31 வயதான நடால் 23-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபனை பொறுத்தவரை 4-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்.

    இந்த ஆண்டை பொறுத்த வரை நடால் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை பெற்றார். ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது இடத்தை பிடித்தார்.

    இந்த ஆண்டில் 3-வது முறையாக கிராண்ட்சி லாமில் இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளார். விம்பிள்டனில் மட்டும் 4-வது சுற்றில் வெளியேறி இருந்தார்.

    மற்றொரு அரை இறுதியில் 12-வது வரிசையில் இருக்கும் பஸ்டா (ஸ்பெயின்)-28ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) மோதினார்கள்.

    இதில் ஆண்டர்சன் 4-6, 7-5, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நடால்-ஆண்டர்சன் மோதும் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 11-ந் தேதி அதிகாலை நடக்கிறது. பெண்கள் இறுதிப் போட்டி நாளை அதிகாலை நடக்கிறது. இதில் அமெரிக்க வீரர்கள் மேடிசன் கெய்ஸ் - ஸ்டெப் ஹென்ஸ் மோதுகிறார்கள்.
    Next Story
    ×