search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
    X

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

    அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
    வாஷிங்டன்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், ஸ்பெயினின் கர்லா நவரோவும் மோதினர். இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

    இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஷரபோவா, லடிவியாவின் அனஸ்டசிஜா செவச்டோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை ஷரபோவா 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரண்டு சுற்றுகளிலும் லடிவியா வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினார். இரண்டாவது சுற்றை 6-4 என ஷரபோவா இழந்தார்.



    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய செவச்டோவா மூன்றாவது சுற்றையும் 6-2 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் செவச்டோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா தோல்வியடைந்து இப்போட்டியில் இருந்து வெளியேறினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி, ரஷியாவின் கரேன் கச்சனோவ் - அண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், ரஷிய ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
    Next Story
    ×