search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடற்தகுதி பெற 13 வருடத்திற்குப் பிறகு உள்ளூர் போட்டியில் களமிறங்குகிறார் ஸ்டெயின்
    X

    உடற்தகுதி பெற 13 வருடத்திற்குப் பிறகு உள்ளூர் போட்டியில் களமிறங்குகிறார் ஸ்டெயின்

    தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்டெயின் உடற்தகுதிக்காக 13 வருடத்திற்குப் பிறகு உள்ளூர் போட்டியில் விளையாட இருக்கிறார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்டெயின். ஐ.சி.சி. பந்து வீச்சு தர வரிசையில் நீண்ட காலமாக முதல் இடத்தை வகித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் சுமார் 10 மாதமாக ஓய்வில் இருந்து வருகிறார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்பு, இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த டெஸ்ட் தொடருக்கான உத்தேச அணியில் ஸ்டெயினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    ஆனால், ‘‘காயம் முழுமையாக குணமடையவில்லை. ஜாகிங், ரன்னிங் போன்ற உடற்பயிற்சி செய்கிறேன். இன்னும் பந்து வீசி பயிற்சி எடுக்கவில்லை’’ என்று ஸ்டெயின் கூறியிருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் முழு உடற்தகுதியை எட்டி வருகிறார். அவரது காயம் குணமடைவதற்கான பயிற்சியின் கடைசி காலக்கட்டம் என்று தென்ஆப்பிரிக்க அணியின் டாக்டர் மொகமது மூசாஜீ தெரிவித்துள்ளார்.



    ஸ்டெயின் ‘‘என்னுடைய முதல் போட்டிக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களே உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.

    மீண்டும் களமிறங்கும் வகையில் உள்ளூர் தொடரில் விளையாடுவதற்கு முடிவு செய்துள்ளார். ஸ்டெயின் 2003-04 சீசனில் உள்ளூர் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின் 13 வருடங்கள் கழித்து தற்போதுதான் உள்ளூர் போட்டியில் விளையாட இருக்கிறார்.

    இதற்காக கேப் கோப்ராஸ் அணியில் இருந்து டைட்டன்ஸ் அணிக்கு மாறியுள்ளார். ஸ்டெயினின் காயம் முழுமையாக குணமடைந்துவிட்டால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார்.
    Next Story
    ×