search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி டென்னிஸ்: கால்இறுதியில் சிமோன் ஹால்ப்
    X

    சின்சினாட்டி டென்னிஸ்: கால்இறுதியில் சிமோன் ஹால்ப்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரூமேனியா வீராங்கனை சிமோன் ஹால்ப் கால்இறுதிக்கு முன்னேறினார்.


    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ரூமேனியா வீராங்கனை சிமோன் ஹால்ப் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் லாத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் தரவரிசையில் 2-ம் வரிசையில் உள்ள ஹால்ப் ‘நம்பர் ஒன்’ இடத்தை நெருங்கி உள்ளார். அவர் கால்இறுதியில் இங்கிலாந்து வீராங்கைை கோன்டாவுடன் மோதுகிறார். மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயினின் முருகுஜா- ரஷியாவின் குசஸ்செட்சோவா மோதுகிறார்கள்.

    Next Story
    ×