search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது மன்னிப்பு, பாக்கி தொகை: பிசிசிஐ பதிலுக்காக காத்திருக்கும் தினேஷ் மோங்கியா
    X

    பொது மன்னிப்பு, பாக்கி தொகை: பிசிசிஐ பதிலுக்காக காத்திருக்கும் தினேஷ் மோங்கியா

    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் தினேஷ் மோங்கியா தனக்கு பொது மன்னிப்பு மற்றும் பாக்கி தொகை தரவேண்டும் என்று பிசிசிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் தினேஷ் மோங்கியா. கபில்தேவால் தொடங்கப்பட்ட இந்தியா கிரிக்கெட் லீக் டி20 தொடரில பங்கேற்க ஒப்பந்தம் ஆனார். ஐசிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்தது.

    இதனால் பெரும்பாலான வீரர்கள் ஐசிஎல் தொடரில் இருந்து விலகினார்கள். அவர்களுக்கு பிசிசிஐ பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால், தினேஷ் மோங்கியாவிற்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்கவில்லை.

    இதற்கிடையே 2015-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் வழக்கின்போது நியூசிலாந்து வீரர் வின்சென்ட் மோங்கியா பெயரை குறிப்பிட்டிருந்தார்.

    தற்போது பிசிசிஐ நிர்வாகத்தை சீர்படுத்த உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழுவை நியமித்துள்ளது. பெரும்பாலானவற்றில் இந்த குழுவின் முடிவு முக்கியமானதாக இருக்கிறது. அசாருதீன் மீது சூதாட்ட புகார் எழுந்தது. ஆனால் கோர்ட் அதை நிராகரித்தது. இதனால் அசாருதீன் பிசிசிஐ-யின் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தார். தற்போது அசாருதீன் தனக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை குறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதே சமயத்தில் மோங்கியாவும் தனக்கு பொதுமன்னிப்பு வழங்கி, பாக்கி தொகையை வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.



    இதுகுறித்து தினேஷ் மோங்கியா கூறுகையில் ‘‘எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. ஐ.சி.எல். தொடரில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. ஆனால் எனக்கு மட்டும் வழங்கவில்லை.

    நான் பிசிசிஐ மற்றும பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மொகமது அசாருதீன் வழக்கை கேட்பதுபோல் என்னுடைய வழக்கை பிசிசிஐ-யில் உள்ள யாராவது ஒருவர் கேட்பார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

    இடது கை பேட்ஸ்மேன் ஆன தினேஷ் மோங்கியா இந்திய அணிக்காக 57 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×