search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் ரீதியாக தெரியாததால் அர்ஜூனா விருது பரிந்துரையில் என் பெயர் இல்லை: போபண்ணா
    X

    தொழில் ரீதியாக தெரியாததால் அர்ஜூனா விருது பரிந்துரையில் என் பெயர் இல்லை: போபண்ணா

    தொழில் ரீதியாக தெரியாததால் அர்ஜூனா விருது பரிந்துரைக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று டென்னிஸ் சங்கம் மீது முன்னணி வீரர் போபண்ணா குற்றம் சாட்டியுள்ளார்.
    விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்கள் - வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

    அதன்படி இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் டென்னிஸ் விளையாட்டுத்துறையில் இருந்து சாகேத் மைனேனி பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. விருதை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்து போபண்ணா பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

    கடந்த ஜூன் மாதம் இந்திய டென்னிஸ் சங்கம், போபண்ணா பெயர் பரிந்துரை செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது பெயரை அனுப்பவில்லை. இதுகுறித்து போபண்ணா கூறுகையில் ‘‘அர்ஜூனா விருது என்பது நமது நாட்டின் விளையாட்டுத்துறையின் மதிப்பிற்குரிய விருது. இந்த விருது வெறும் மதிப்பிற்கு மட்டுமல்ல. வீரர்களின் தகுதிகளை பிரதிபலிக்கிறது.



    தொழில்முறை டென்னிஸ் வீரர்களான நாங்கள் நாட்டிற்கு பெருமைத்தேடி தருகிறோம். யாரும் இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனினும், டென்னிஸ் அசோசியேசன் இந்த விஷயத்தில் மோசமாக உள்ளது. இது அவமதிப்பு மட்டுமல்ல, தகுதியான அங்கீகாரத்தின் நம்பிக்கையையும் சூறையாடுகிறது.

    குறிப்பிட்ட கெடுவிற்கு முன் எனது பெயரை பரிந்துரை செய்யாதற்கு, தொழில் ரீதியாக தெரியாததும் செயல்திறன் இல்லாததும்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறேன். எனக்கு தகுதி இருந்தபோதிலும் கடந்த 10 ஆண்டுகளாக இப்படிப்பட்ட சம்பவத்தை நான் பார்த்திருக்கிறேன்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
    Next Story
    ×