search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகப்பா தங்ககோப்பை: 10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி-சென்னையில் நாளை தொடக்கம்
    X

    முருகப்பா தங்ககோப்பை: 10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி-சென்னையில் நாளை தொடக்கம்

    91-வது எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
    சென்னை:

    91-வது எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

    ஆகஸ்ட் 6-ந் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், பஞ்சாப் சிந்த் வங்கி, ஆக்கி தமிழ்நாடு, ஆக்கி பெங்களூர் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஒ.என்.ஜி.சி. பஞ்சாப் நேசனல் வங்கி, ராணுவ லெவன், ஆக்கி ஒடிஷா, மத்திய தலைமை செயலகம் ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ‘லீக்’ முதல் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.2½ லட்சமும் வழங்கப்படும். நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்- ஆக்கி தமிழ்நாடு, ராணுவ லெவன்- ஆக்கி ஒடிஷா அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×