search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்மன்ப்ரீத் கவுர் வேலை மாற்றத்திற்கு உதவிய சச்சின் தெண்டுல்கர்
    X

    ஹர்மன்ப்ரீத் கவுர் வேலை மாற்றத்திற்கு உதவிய சச்சின் தெண்டுல்கர்

    இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ள கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் வேலை மாற்றத்திற்காக சச்சின் தெண்டுல்கர் உதவி புரிந்துள்ளார்.
    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 115 பந்தில் 20 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். மேலும், பெண்கள் கிரிக்கெட் பக்கம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

    தற்போது முன்னணி வீராங்கனையாக வளம்வரும் கவுருக்கு சச்சின் தெண்டுல்கர் வேலை மாற்றத்திற்காக உதவி செய்துள்ளார்.



    பிசிசிஐ-யில் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயனா எடுல்ஜியும் இடம்பிடித்துள்ளார்.

    டயனா எடுல்ஜி ஹர்மன்ப்ரீத் கவுர் குறித்து கூறுகையில் ‘‘ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் கிரிக்கெட்டராக விளையாடி வந்தார். அப்போது கவுரை சந்தித்த நான், உன்னுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள மும்பைக்கு செல் என்று கூறினேன். எனினும், ஹர்மன்ப்ரீத் வடக்கு ரெயில்வேயில் வேலைப் பார்த்து வந்தார். வடக்கு ரெயில்வேயில் உயர் பதவி கிடைத்தால் மட்டுமே மும்பைக்கு மாற முடியும் என ஹர்மன்ப்ரீத் கூறினார்.

    அப்போது ஹர்மன்ப்ரீத் ஜூனியர் அளவிலான பதவியில் இருந்தார். அவர் தலைமை அதிகாரி சூப்பிரெண்டு பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினேன். அவருடைய விண்ணப்பத்தை டெல்லி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தலைவரால் அது நிராகரிக்கப்பட்டது.



    பின்னர் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு வேலை தொடர்பாக வேண்டுகோள் விடுத்தேன். அதன்படி சச்சின் தெண்டுல்கர் ரெயில்வே துறைக்கு கடிதம் எழுத ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பைக்கு மாற்றமானார்’’ என்றார்.

    தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 171 ரன்கள் குவித்ததன் மூலம் தானாகவே இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார்.
    Next Story
    ×