search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி பிறந்தநாள் கொண்டாட்டம்: வழக்கமான பாணியில் அல்வா கொடுத்து அசத்திய தல - வீடியோ இணைப்பு
    X

    டோனி பிறந்தநாள் கொண்டாட்டம்: வழக்கமான பாணியில் அல்வா கொடுத்து அசத்திய தல - வீடியோ இணைப்பு

    இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, நேற்று தனது 36-வது பிறந்தநாளை மேற்கிந்திய தீவுகளில் உள்ள விடுதியில் வைத்து இந்திய அணியினருடன் கொண்டாடினார்.

    கிங்ஸ்டன்:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் முன்னாள் கேப்டனுமான டோனி, நேற்று தனது 36-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இந்திய வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் சுற்றுபயணத்தில் இருப்பதால் அவரது பிறந்தநாளை அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் வைத்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் புகைப்படங்களும், இந்திய வீரர்களால் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைபடத்தை பகிர்ந்துள்ளார். அப்படத்தில் கோலி, டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டோனி முகம் முழுவதும் கேக் பூசிய நிலையில் உள்ளார். கோலி அவரை கிண்டல் செய்வது போல போஸ் கொடுத்துள்ளார். இதை யுவராஜ் பின்னால் நின்று பார்த்து கொண்டு இருக்குமாறு அப்படம் அமைந்துள்ளது.

    இந்திய வீரர் ஷிகர் தவான், ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரகானே, டிவிட்டர் பக்கத்தில் டோனியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டிய டோனி மற்றவர்கள் தன் மேல் கேக் பூசுவதற்கு முன்னர் அவரே தன் முகத்தில் கேக்கை பூசிக்கொண்டார். இதன்மூலம் மற்ற வீரர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

    இது மேற்கிந்திய தீவுகளில் டோனி கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாளாகும். இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டிளும் டோனி தனது பிறந்தநாளை மேற்கிந்திய தீவுகளில் வைத்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து கொண்டாடியிருந்தார்.
    Next Story
    ×