search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங்
    X

    தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் களம் இறங்கிய யுவராஜ் சிங்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2-வது போட்டியின்போது யுவராஜ் சிங் தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியுடன் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.
    இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடர் முடிந்த பிறகு இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.

    முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்டியா அவுட்டான பிறகு யுவராஜ் சிங் களம் இறங்கினார். இவர் 10 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். யுவராஜ் சிங் பேட்டிங் செய்ய வரும்போது தவறுதலாக சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியை அணிந்து வந்தார். இது ரசிகர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

    பொதுவாக ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மட்டும்தான் ஐ.சி.சி. லோகோவுடன் ஜெர்சி வழங்கப்படும். மற்ற இருநாடுகளுக்கு இடையிலான தொடரின்போது இந்திய அணிக்கான ஸ்பான்சர் அளிக்கும் ஜெர்சியுடன் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×