search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலெவ்ஸ் அணியை வீழ்த்தி ‘கோபா டெல் ரெய்’ சாம்பியன் ஆனது பார்சிலோனா
    X

    அலெவ்ஸ் அணியை வீழ்த்தி ‘கோபா டெல் ரெய்’ சாம்பியன் ஆனது பார்சிலோனா

    கோபா டெல் ரெய் கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் டெபோர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை 3-1 என வீழ்த்தி பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
    கோபா டெல் ரெய் கால்பந்து இறுதிப்போட்டி நேற்று மாட்ரிட்டில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா - டெபோர்ட்டிவோ அலெவ்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் அலெவ்ஸ் அணிக்கு ‘பிரிஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஹெர்னாண்டஸ் தியோ சிறப்பாக கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.



    45-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த அபாரமான பந்தை நெய்மர் கோலாக்கினார். முதல்பாதி நேரத்தின் கூடுதல் நேரத்தில் மெஸ்சி பாஸ் செய்த பந்தை அல்காசெர் அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்றது.



    பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பார்சிலோனா 3-1 என வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக கோபா டெல் ரெய் கோப்பையை கைப்பற்றியது. இந்த கோப்பையுடன் பார்சிலோனா 29-வது முறையாக கோபா டெல் ரெய் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடைசி 64 வருடத்தில் தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
    Next Story
    ×