search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகள் பெயர்களை அனுப்புங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சிஓஏ கடிதம்
    X

    அதிகாரிகள் பெயர்களை அனுப்புங்கள்: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சிஓஏ கடிதம்

    மாநில சங்கங்களில் இடம்பிடித்துள்ள அதிகாரிகளின் பெயர்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று சிஓஏ கடிதம் எழுதியுள்ளது.
    பிசிசிஐ நிர்வாகத்தில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர லோதா தலைமையிலான கமிட்டி உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு கருத்துக்களை பரிந்துரை செய்தது.

    70 வயதிற்கு மேற்பட்டோர் கிரிக்கெட் சங்க பதவியில் இருக்கக்கூடாது. அவர்கள் ஏற்கனவே கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் பதவியில் இருக்கக்கூடாது என பல்வேறு கருத்துக்களை பரிந்துரை செய்திருந்தது.

    இதில் ஏராளமான பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனால் பிசிசிஐ-யின் தலைவர் அனுராக் தாகூர் போன்ற முக்கிய அதிகாரிகள் தானாகவே பதவி விலக நேரிட்டது.

    ஆனால் மாநில சங்கங்கள் லோதா கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்த தயக்கம் காட்டியது. இதனால் பிசிசிஐ நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்த வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

    இந்த குழு நிர்வாக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒத்துழைக்காததால், தற்போது யார் யார் பதவியில் இருக்கிறார்கள் என்ற பட்டியலை அனுப்பும்படி அனைத்து மாநில சங்கங்களுக்கும் நிர்வாகக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

    இந்தக்குழு ஏற்கனவே இதே கருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தது. அப்போது லோதா கமிட்டியின் பரிந்துரையில் சரியான விளக்கம் இல்லை. இதனால் அதிகாரிகளின் பெயரை வெளியிட முடியாது என்று மாநில சங்கங்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×