search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் போட்டியில் விளையாட ஆவலாக உள்ளேன்: வீராட்கோலி
    X

    சாம்பியன்ஸ் போட்டியில் விளையாட ஆவலாக உள்ளேன்: வீராட்கோலி

    கேப்டன் பதவியில் மிகப்பெரிய ஐ.சி.சி. போட்டி தொடர் இது என்பதால் சாம்பியன்ஸ் போட்டியில் விளையாட மிகவும் ஆவலாக உள்ளதாக வீராட் கோலி கூறியுள்ளார்.
    லண்டன்:

    8 நாடுகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று லண்டன் சென்று அடைந்தது.

    சாம்பியன்ஸ் கோப்பை போட்டி குறித்து வீராட் கோலி கூறியதாவது:-



    கேப்டன் பதவியில் என்னுடைய மிகப்பெரிய ஐ.சி.சி. போட்டி தொடர் இது. இதனால் சாம்பியன்ஸ் போட்டியில் விளையாட மிகவும் ஆவலாக உள்ளேன்.

    கடந்த முறை இன்று நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றோம். அதற்கு எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதே காரணம். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் வலுவாக இருந்தனர். தொடக்க வீரர்களும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருந்தனர்.

    இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மிகுந்த அனுபவத்தை பெற்று உள்ளனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை விரும்புகிறேன். ஏனென்றால் இது சவால் நிறைந்த போட்டியாகும்.

    ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியில் லீக் ஆட்டங்கள் இருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் லீக் ஆட்டம் இருந்தாலும் நீங்கள் அரைஇறுதிக்கு முன்னேறு வீர்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இங்கு நான் ரன் குவிக்கவில்லை. அணிக்கு நல்ல பங்களிப்பை அளிக்கவில்லை. இந்த முறை வெற்றியை கைப்பற்ற விரும்புகிறேன். இது நான் சிறப்பாக செயல்பட உத்வேகமாக உள்ளது.

    இங்கிலாந்து மண்ணில் சாதிக்க வேண்டும். அது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்திகரமான ஒன்றாக இருக்கும்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் பின்வரிசையில் டோனி மீது அதிக சுமை. இருந்தும் கடைசி கட்டத்தில் சரியாக ஒத்துழைப்பு இல்லாமல் அவர் முழு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது.



    தற்போது கேதர் யாதவ், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் பின்வரிசையில் நன்றாக விளையாடுவார்கள். பின்வரிசை வலுவாக இருப்பதால் டோனிக்கு நெருக்கடி குறைந்து இருக்கிறது.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கேட்டு இருப்பது ஏற்கனவே பின்பற்றும் நடை முறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×