search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். மூலம் ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற ஸ்டோக்ஸ்: டி வில்லியர்ஸ்
    X

    ஐ.பி.எல். மூலம் ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற ஸ்டோக்ஸ்: டி வில்லியர்ஸ்

    ஐ.பி.எல். தொடர் மூலம் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், முதன்முறையாக ஐ.பி.எல். 2017 தொடரில் கலந்து கொண்டார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக விளையாடிய அவர், சதம் அடித்ததுடன் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். பெரும்பாலான போட்டிகளில் புனே அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. சாம்பியன்ஸ் தொடருக்கு முன்னோட்டமாக தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

    ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல் ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடுவார் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பயப்படுகிறார்.

    பென் ஸ்டோக்ஸ் குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘பென் ஸ்டோக்ஸ் தலைசிறந்த வீரர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் உண்மையிலேயே சில ஸ்பெஷலான திறமையை பெற்றுள்ளார்.



    ஏராளமான வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் தங்களுடைய வழியை தொலைத்துள்ளனர். பலர் அவர்களுடைய ஆட்டம் மூலம் அடுத்த லெவலை தேடியுள்ளனர். பென் ஸ்டோக்சின் ஆட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது அவருக்கு சிறந்ததாக இருக்கும்.

    எங்களுடைய சில வீரர்களும் ஐ.பி.எல். மூலம் முன்னேற்றம் பெற்றுள்ளனர். நான் வலைப்பயிற்சியில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சில் முன்னேற்றம் கண்டுள்ளார். புதிய சில பந்து வீச்சுக்களை கண்டுபிடித்துள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×