search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமாக ஆடிவிட்டு கேப்டனாக இங்கு நின்று பேசுவதற்கு கஷ்டமாக உள்ளது: புனே தோல்வி குறித்து கோலி கருத்து
    X

    மோசமாக ஆடிவிட்டு கேப்டனாக இங்கு நின்று பேசுவதற்கு கஷ்டமாக உள்ளது: புனே தோல்வி குறித்து கோலி கருத்து

    மோசமாக விளையாடி விட்டு கேப்டனாக இங்கு நின்று பேசுவதற்கு கஷ்டமாக உள்ளது என்று, புனே அணிக்கெதிரான தோல்விக்குப்பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கருத்து கூறியுள்ளார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியால் 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    விராட் கோலி ஒருவர் மட்டுமே நிலைத்து நின்று 48 பந்தில் 55 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னோடு அவுட்டானார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் சொதப்பல் ஆட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தோல்வியில் மூலம் ஏறக்குறையை பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது பெங்களூரு அணி.

    போட்டிக்குப்பின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விராட் தோல்வி குறித்து பேசினார். அதில் ‘‘இதுபோன்று மோசமாக விளையாடி விட்டு, கேப்டனாக இங்கே வந்து பேசுவதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. ஆனால், இந்த தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன்.

    இதுபோன்ற தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட அனைத்து பொறுப்புகளையும் நான் எடுத்துக் கொள்வது அவசியம். நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம். ஆனால் சிறந்த முறையில் அது வெளிப்படவில்லை.

    தொடர் தோல்விகளுக்குப் பிறகு வீரர்கள் பயத்தில் உள்ளனர். இதனால் வெற்றிக்கான நோக்கம் நோக்கத்தில் குறைபாடு உள்ளது. வீரர்களிடையே சிறந்த உணர்வு காணப்படவில்லை.



    புனே அணி வெற்றி பெற்றது என்பதை விட நாங்கள் தோல்வியடைந்தோம். ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தோல்வி குறித்து எந்தவித கவலையும் அடையாமல் மகிழ்ச்சியாக மீதமுள்ள நான்கு போட்டிகளில் விளையாட முடியும்’’ என்றார்.
    Next Story
    ×