search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிக்கி பாண்டிங்கின் ஐ.பி.எல். 2017-ன் சிறந்த லெவன் அணி: கோலி, டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா, டோனிக்கு இடமில்லை
    X

    ரிக்கி பாண்டிங்கின் ஐ.பி.எல். 2017-ன் சிறந்த லெவன் அணி: கோலி, டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா, டோனிக்கு இடமில்லை

    ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். 2017-ன் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இதில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா மற்றும் டோனிக்கு இடம் கொடுக்கவில்லை.
    ஐ.பி.எல். சீசன் 2017 டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆடும் லெவனில் 7 இந்திய வீரர்கள் மற்றும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள்.

    தற்போது வரை முடிந்துள்ள போட்டிகள் முடிவின் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். 2017 சீசனுக்கான சிறந்த லெவன் அணியை தேர்வு செய்துள்ளார்.

    ரிக்கி பாண்டிங்கின் சிறந்த லெவன் அணி:-

    1. ஹசிம் அம்லா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), 2. டேவிட் வார்னர்- கேப்டன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), 3. சுரேஷ் ரெய்னா (குஜராத் லயன்ஸ்), 4. ஜோஸ் பட்லர்- விக்கெட் கீப்பர் (மும்பை இந்தியன்ஸ்), 5. நிதிஷ் ராணா (மும்பை இந்தியன்ஸ்), 6. மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), 7. கிறிஸ் மோரிஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்), 8. ஹர்பஜன் சிங் (மும்பை இந்தியன்ஸ்), 9. புவனேஸ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), 10. மெக்கிளெனகன் (மும்பை இந்தியன்ஸ்), 11. ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்).

    புவனேஸ்வர் குமார் இதுவரை 16 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தியுள்ளார். ஹர்பஜன் நான்கு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினாலும் ரன்கள் அதிக அளவில் கொடுக்கவில்லை. ரெய்னா 8 போட்டியில் 309 ரன்கள் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 141.74 ஆகும். ராணா இந்த ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஷித் கான் மாயாஜால பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.
    Next Story
    ×