search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த சிக்கல் நீடிக்கிறது
    X

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த சிக்கல் நீடிக்கிறது

    புதிய ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிக்கிறது.
    மெல்போர்ன் :

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான 5 ஆண்டு கால ஒப்பந்தம் வருகிற ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய வருவாயை வீரர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் முறை கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த முறையை ஒழித்து விட்டு, வருவாயில் 55 சதவீதம் கிரிக்கெட் வாரியத்துக்கும், 22.5 சதவீதம் வீரர்களுக்கும், மீதமுள்ள 22.5 சதவீதம் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் என்று பிரித்து கொள்ளலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வைத்த திட்டத்தை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதால் சிக்கல் நீடிக்கிறது.
    Next Story
    ×