search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து வேதனையளிக்கிறது - மம்தா பானர்ஜி
    X

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து வேதனையளிக்கிறது - மம்தா பானர்ஜி

    சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #SupremeCourt #DemocracyInDanger

    புதுடெல்லி:

    இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 

    இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும், என கூறினர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்த கருத்து வேதனையளிப்பதாக இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டி குறித்து இன்று வெளியான தகவலினால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். ஒரு சாதாரண குடிமகனாக பார்க்கும் பொழுது, நீதிமன்ற நடைமுறை குறித்து நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தெரிவித்த தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. நீதித்துறையும், ஊடகமும் ஜனநாயகத்தின் தூண்களாகும். நீதித்துறையில் மத்திய அரசின் அதிகபடியான தலையீடு ஜனநாயகத்துக்கு ஆபத்தானதாகும். 

    இவ்வாறு மம்தா பானர்ஜி பதிவு செய்துள்ள பதிவில் கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #DemocracyInDanger #tamilnews
    Next Story
    ×